விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரியில் உணவு திருவிழா

விருத்தாசலம், மார்ச் 4: விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை மன்றத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முகுந்தகுமாரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விலங்கியல் துறை தலைவர் செந்தில்குமார், பேராசிரியர் ஹெலன்ரூத்ஜாய்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட விலங்கியல் துறை மாணவ மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் ரங்கோலி வண்ண கோலப்போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகளின் தயாரிப்பில் ராகி, கம்பு, சோளம், வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருட்களான உணவு பண்டங்கள் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதில் வேதியல்துறை, இயற்பியல் துறை, விலங்கியல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: