பர்கூரில் அதிமுக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: பர்கூர் பஸ் நிலையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பர்கூர் ஒன்றிய, பேரூர் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் எம்பியுமான தம்பிதுரை தலைமை வகித்து பேசுகையில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பயணிக்கிறது. தற்போது தமிழக அரசு தமிழ்நாட்டிற்கு 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்று தந்துள்ளது. தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்,’ என்றார்.கூட்டத்தில், பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்பி பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர செயலாளர் துரை ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு, கூட்டுறவு சங்க தலைவர் மாதையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: