அம்பை நகராட்சி பகுதியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையர் அதிரடி நடவடிக்கை

அம்பை, பிப். 20:  அம்பை நகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடு மற்றும் வர்த்த நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து ஆணையாளர் (பொ) ஜின்னா கூறுகையில், அம்பை நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்குபட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி மூலம் 8 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வரப்படுகிறது. நகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம், குத்தகை கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு  ஏற்கனவே பொதுமக்களுக்கு தெரியும் அளவில் ஆங்காங்கே நகராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டுள்ளது.மேலும் குப்பைகள் சேகரிக்க செல்லும் நகராட்சி வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக இதுவரை நகராட்சிக்கு முறையாக குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது. பணி மேற்பார்வையாளர் சோலைச்சாமி, பிட்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் அதிரடியாக துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் நிரந்தரமாக இணைப்பை துண்டிக்கும் முன் நகராட்சி அலுவலகத்தில்  குடிநீர் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, குத்தகை போன்றவற்றையும் உடனடியாக செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: