கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு மறுவரையறை வெளியீடு

கள்ளக்குறிச்சி, பிப். 19: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்ட  ஊராட்சி வார்டுகள் 8,9 மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் (1 முதல் 23 வரை) மறுவரையறை பட்டியலை பொதுமக்கள் பார்வைக்காக கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார  வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) நடராஜன் வெளியிட்டார். மேலும் 46 கிராம  ஊராட்சிகளிலும் மறுவரையறை செய்யப்பட்ட பட்டியலை புதிய கிராம ஊராட்சி வார்டுகள் தனி  அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவக்குமார் வெளியிட்டார்.  அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது) கொளஞ்சிவேலு, (திட்டம்)  கணேசன் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.    

இதுபோன்று தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட  மாவட்ட ஊராட்சி வார்டுகள் 13,14 மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் (1 முதல்  16 வரை) மறுவரையறை பட்டியலை பொதுமக்கள் பார்வைக்காக தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராமதாஸ் வெளியிட்டார். மேலும் 40 கிராம  ஊராட்சிகளிலும் மறுவரையறை செய்யப்பட்ட பட்டியலை  புதிய கிராம ஊராட்சி வார்டுகள் தனி  அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இந்திராணி வெளியிட்டார்.  அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ராஜேந்திரன், மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்)  ராஜசேகர், தேர்தல் உதவியாளர் கார்த்திக் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள்  உடன் இருந்தனர்.       

Related Stories: