விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

காரைக்குடி, பிப். 19: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் 12ம் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் கல்வி அறக்கட்டளை இயக்குநர் உருமநாதன், அறங்காவலர் பழனிவேலு, அகரம் கல்வி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு நடந்த வாரிய தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் வருகை பதிவு, சிறந்த நூலக வாசகர்கள், தேர்ச்சி விகிதம் அதிகம் கொடுத்த ஆசிரியர்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர் விவேகானந்தா ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: