இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 35 இளைஞர்களுக்கு ஓட்டுனர் சான்றிதழ்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்ற 35 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 35 இளைஞர்களுக்கு இலகு ரக வாகன ஓட்டுதல் பயிற்சி கடந்த 30 நாட்களாக வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் பயனாளிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை, நகர்புறம், கிராமபுறம், மலைப் பகுதிகளில் எவ்வாறு வாகனம் ஓட்டுவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது பயிற்சியின் இறுதி நாளில் பயனாளிகளுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய இயக்குநர் சங்கர் கணேஷ் தலைமை வகித்து, சான்றிதழ்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிதிசார் கல்வி ஆலோசகர் பூசாமி பங்கேற்று, மத்திய அரசின் இன்சூரன்ஸ், பென்சன் திட்டங்கள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியின் போது பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ் படிவங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: