×

10 நாட்களாக குடிநீர் வரவில்லை தொண்டி பகுதி மக்கள் வேதனை

தொண்டி, பிப்.18: தொண்டி பகுதியில் கடந்த 10 நாட்களுககு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சில நேரங்களில் முன் அறிவிப்பு இல்லாமல் தொடர்ந்து நான்கு நாட்களாக தண்ணீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது பொது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பேருராட்சி செயல் அலுவலர் பல்வேறு பேரூராட்சிகளுக்கு அலுவலராக பொறுப்பில் இருப்பதால், தொண்டியின் மீது போதிய கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தொண்டி பகுதியின் தேவைகள் கவனிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமுமுக மாவட்ட செயலாளர் ஜீப்ரி கூறியது, கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொண்டி பகுதியில் போதிய குடிதண்ணீர் வழங்க வில்லை. இதனால் பெரும் கஷ்டமாக உள்ளது. தொண்டி பேரூராட்சிக்கென தனியாக செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பொதுமக்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...