×

உண்டு உறைவிட பள்ளியில் நாணய கண்காட்சி

தேன்கனிக்கோட்டை, பிப்.18: தேன்கனிக்கோட்டை உண்டு உறைவிடப்பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை சந்தை மைதானத்தில், அனைவருக்கும் கல்வி  இயக்கம் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஏஆர்எஸ் உண்டு உறைவிடப்பள்ளியில்,  நாணய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி  அலுவலர் ஜோதி சந்திரா துவக்கி வைத்து பார்வையிட்டார். கல்வி டிவி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், ஓசூர் ஜி பள்ளி தாளாளர் சந்திரசேகர், தொண்டு  நிறுவன நிர்வாகி சாம்சன்வெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 120  நாட்டு நாணயங்கள், பணத்தாள், அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை, சோடா மூடி, தீப்பெட்டி, பண்டைய கால பத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை பள்ளி  மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதுகுறித்து நாணய  சேகரிப்பாளர் குமாரபாளையம் தாமரைராஜ் கூறுகையில், ‘15 வருடங்களாக நாணயங்களை  சேகரித்தேன். 5 வருடங்களாக பள்ளி, கல்லூரிகளில் இலவசமாக 200க்கும்  மேற்பட்ட கண்காட்சியை நடத்தியுள்ளேன்,’ என்றார்.

Tags : Coin Exhibition ,Boarding School ,
× RELATED உண்டு உறைவிட பள்ளியின் 1ம் வகுப்பு மாணவி பலாத்காரம்