×

உண்டு உறைவிட பள்ளியின் 1ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

சுக்மா: சட்டீஸ்கரில் செயல்படும் உண்டு உறைவிடப் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் பஸ்தார் பகுதியானது நக்சல்கள் கும்பலால் பாதிக்கப்பட்ட கிராமமாகும். அப்பகுதி பெண்களின் முன்னேற்றத்திற்காக எர்ராபோர் குடியிருப்பு வளாகத்தில் உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை, தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்றனர். அப்போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

தொடர் விசாரணையில், அந்த சிறுமியை அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசுக்கு பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர்கள் மாணவியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத குற்றவாளியின் மீது ஐபிசி மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post உண்டு உறைவிட பள்ளியின் 1ம் வகுப்பு மாணவி பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Udu boarding school ,Sukma ,Undu Boarding School ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி