ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்

விழுப்புரம், பிப். 18:  விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மணிவாசகம், கலியமூர்த்தி, சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் அப்பாவு, இன்பஒளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததைப்போல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முடிவைகைவிட தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிடவும், விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: