×

டூவீலர் மீது வேன் மோதி வாலிபர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி, பிப்.17: காவேரிப்பட்டணம் அருகே, அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு(32). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் டூவீலரில் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி டேம் கூட்ரோடு அருகே   உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த வேன்  மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த சிவகுரு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று சிவகுரு உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து வேன் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Van ,mourner ,
× RELATED மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...