×

வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை

ஹனாய்: வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரான கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வியட்நாமில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் ட்ரூங் மை லான்(67). இவருக்கு சொந்தமான வான் தின் பாட் நிறுவனத்தின்கீழ் உணவகங்கள், விடுதிகள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் பல்வேறு நிதி சேவைகளிலும் முதலீடுகளை செய்துள்ளது.

சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியின் 90% பங்குகளை வைத்திருந்த ட்ரூங் மை லான், 2012 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் வங்கியிலிருந்து பணம் பெற்றதாக புகார் எழுந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலான மோசடியில் வங்கிக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2022ல் வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் என்று கூறப்படுகிறது.

வியட்நாமை நாட்டை உலுக்கிய இந்த நிதி மோசடி தொடர்பாக வழக்கு ஹோசிமின் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தொழிலதிபரான கோடீஸ்வர பெண் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post வியட்நாமை உலுக்கிய நிதி மோசடி வழக்கு; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Tags : Vietnam ,Hanoi ,Truong My Lan ,Van Dinh Pat ,
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...