அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறு

வில்லியனூர், பிப். 17:  வில்லியனூர் அடுத்த அரும்பார்த்தப்புரம் பகுதியில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங்கில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனால் இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2013ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்டமாக ரயில்வே கிராசிங் மேலே ரூ.5 கோடி செலவில் ரயில்வே துறை மூலம் மேம்பாலம் கட்டப்பட்டது. பிறகு இதனை இரண்டு புறங்களிலும் சாலையை இணைக்கும் பாலம் ரூ.28 கோடி செலவில் புதுச்சேரி மாநில நெடுஞ்சாலை துறை மேற்ெகாண்டது.  இந்த இணைப்பு பாலத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ததற்கு பணம் ெகாடுப்பதில் சிக்கல் நிலவியது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிலஉரிமையாளர்களிடம் புதிய நில ஆர்ஜிதப்படி பணம் வழங்குவதாகவும், தற்போது பணி செய்வதை தடுக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். இதனால் கடந்த செப்டம்பரில் மீண்டும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. பணிகள் துவங்கிய ஒரு வாரத்திலேயே நில உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றதால் மேம்பால பணிக்கு மீண்டும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

Advertising
Advertising

 இந்நிலையில் நில உரிமையாளர்கள், நிலத்தின் தன்மைக்கேற்ப ெதாகையை பெற்றுக் கொள்கிறோம் என்றும் விலை நிர்ணயம் தொடர்பான முரண்பாடுகை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து அரசு நிர்ணயம் செய்த தொகையானது, நீதிமன்றம் ெசன்ற 9 நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் அவர்கள் தற்போது நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றதால் இடைக்கால தடை விலக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் இணைப்பு மேம்பாலம் கட்டும் பணிக்காக பில்லர் அமைக்கும் பணியினை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் செல்லாத மற்ற நில உரிமையாளர்கள். தற்போது அவர்களுக்கு கொடுத்த தொதையை போலவே தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு வழங்காதபட்சத்தில் நீதிமன்றம் செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் மேம்பால பணிக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மேம்பால பணிக்கு தடைவிதிக்கும் முன், அரசு தகுந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: