விசிக ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி, பிப். 17:    கள்ளக்குறிச்சி நகர விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைந்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது. நகர செயலாளர் பச்சையாபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, கலையழகன், தமிழகன், விடுதலைமணி, ரகுராமன், பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றொரு நகர செயலாளர் இடிமுரசு வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனபால், மாநில நிர்வாகிகள் ஞானதிலகர், கூத்தக்குடி பாலு, பரசுராமன், திருமாதுரை, பொன்னிவளவன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் இனியன், சீனுவாசன், மாணிக்கம், விக்ரமன், முருகன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வருகின்ற 22ம் தேதி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணி மாநாட்டிற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்லவது எனவும், கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

விழுப்புரம், பிப். 17: மரக்காணம் அருகே பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(45). இவர், தொடர்ந்து இப்பகுதியில் சாராயம் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஜாமீனில் வெளியே வரும் இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரது நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்புக்காவலில் கைது செய்ய எஸ்பி ஜெயக்குமார், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் இளங்கோவனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: