×

கொரோனா பாதிப்பு எதிரொலி பன்றிக்கறி, ஆட்டு ரத்தம் சாப்பிட வேண்டாம் ஈரல், குடலையும் கொஞ்சநாள் நிறுத்த டாக்டர்கள் அறிவுரை

சாயல்குடி, பிப். 13: கொரோனா வைரஸ் தொற்றாமல் இருப்பது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: பொதுவாகவே வைரஸ்கள் வெயில் அதிகம் இருக்கும் போதும், அதிக வெப்பநிலையிலும் இறந்து விடும். இதில் கொரோனா வைரஸ் எப்படிப்பட்ட வெப்பத்தை தாங்கும் என்பதை உறுதி செய்ய சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை கையாள வேண்டும்.குறிப்பாக பன்றிக்கறியில் கிருமிகள், வைரஸ்கள் அதிகம் இருக்கும். பன்றி இறைச்சியை எவ்வளவு அதிகமான சூட்டில் வேக வைத்தாலும் அதற்குள் உள்ள வைரஸ்களோ கிருமிகளோ சாகாது. அதேபோல் ஆட்டு ரத்தத்தில் அதிகளவு கிருமிகள் இருக்கும். சாதாரணமாக அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஆட்டு ரத்தத்தை பொறித்து சாப்பிடும் வழக்கம் உண்டு.

ஆட்டு ரத்தத்தில் உள்ள கிருமிகள் எவ்வளவு அதிகமான சூட்டிலும் சாகாது என்பதே உண்மை. அதேபோல் ஆட்டு ஈரல், சுவரொட்டி இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சில காலத்திற்கு ஆட்டு குடல், இரைப்பைகளை சாப்பிடுவதை கூட நிறுத்தினால் நல்லது.அதேபோல் கைகளை தினமும் 30 முறை லிக்விட் போட்டு கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது. சோப்பினை ஒருவர் கையில் தேய்க்கும் போது, கையில் உள்ள கிருமி சோப்பில் ஒட்டியிருக்கும். இதனை மற்றவர்கள் பயன்படுத்தும் போது பரவும் வாய்ப்பு அதிகம். இதனால் லிக்குவிட் தான் பாதுகாப்பானது. 30 முறை கை கழுவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 13 முறை கை கழுவ வேண்டும்.

மணிக்கட்டு வரை கைகளை கழுவ வேண்டும். முழங்காலுக்கு கீழே உள்ள கால்களையும் நன்கு கழுவ வேண்டும். மூக்கு பகுதியில் இயற்கையான பில்டர் உண்டு. மூக்கின் உள்பகுதியில் உள்ள முடி அதிகளவு வளர்ந்தால் மட்டுமே வெட்ட வேண்டும். மற்றபடி மூக்கின் உள்பகுதியில் பில்டர் செய்ய உதவும் முடிகளை அடிக்கடியோ இல்லை சுத்தமாகவோ வெட்டி அகற்றுவதும் தவறு. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிக, மிக எளிது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்த ஒரு தெளிவு உருவாகும் வரை மக்கள் கவனமாக இருப்பது ஒன்று தான் சிறந்த தீர்வு. சளி, இருமல், தடுமம், காய்ச்சலுக்கு எக்காரணம் கொண்டும் சுயமான சிகிச்சை பெறவே கூடாது. டாக்டர்களை ஆலோசித்தே மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : doctors ,
× RELATED கொரோனா வைரஸ் எதிரொலி செக்போஸ்ட் அமைத்து ஊருக்குள் நுழைய தடை