வத்தலக்குண்டுவில் கிருஷ்ணா பாலிடெக்னிக் ஆண்டு விழா

வத்தலக்குண்டு, பிப். 11: வத்தலக்குண்டு  கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அறிவியல் கண்காட்சியை வத்தலக்குண்டு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர். 2ம் நாள் முடிவில் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சகிலா தலைமை வகித்தார். தாளாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம், கல்லூரி முன்னாள் மாணவர்கள் காவல்துறை ஆனந்தராஜ், மின்வாரிய அதிகாரி அன்பழகன், சிங்கப்பூர் பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தந்த மாணவ, மாணவிகளுக்கும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி கண்காணிப்பாளர் ராமநாதன் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிர்வாக அலுவலர் கோகுலன் நன்றி கூறினார்.

Related Stories: