குறிஞ்சிப்பாடியில் சேதமடைந்து காணப்படும் ஆஸ்பத்திரி சாலை

நெய்வேலி, பிப். 11: குறிஞ்சிப்பாடி ராஜாகுட்டை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். சின்ன கடைத்தெரு, பெரிய கடை தெரு, மீன் மார்க்கெட், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அங்கன்வாடி மையம், சுகாதார அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகம் செல்ல இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தங்கள் சைக்கிள்களில் செல்லும்போது சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.மேலும் சாலை ஓரங்களில் கால்வாய்கள் திறந்து கிடப்பதாலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தாலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாய்க்காலில் விழுந்து காயமடைகின்றனர்.சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: