220 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் .

விழுப்புரம், பிப். 11: விழுப்புரம் மாவட்டத்தில் 220 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிகளுக்கான நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு விழுப்புரத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்து முடிந்து 220 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.தமிழகத்தில் 2017-18, 2018-19 மற்றும் 2019-20ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 220 பேருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பணியாணைகளை வழங்கினார்.மேலும் மருத்துவ சான்றிதழுடன் நாளை (12ம் தேதி ) பணியில் சேரவேண்டும் என்று கூறினார்.

Related Stories: