விழுப்புரம் அருகே ஆதிதிராவிடர்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி ஆக்கிரமிப்பு

விழுப்புரம், பிப். 7: விழுப்புரம் அருகே ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இடத்ைத சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டியுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையம் புதியகாலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 50 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி அமைப்பதற்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காகவும் குறிப்பிட்ட இடம் மைய பகுதியில் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தினை சிலர் வீடுகட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

எங்கள்கிராமத்தை சுற்றி புறம்போக்கு இடங்கள் ஏதும்இல்லை. அரசு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், கோயில்கட்டுவதற்கும் இடவசதியில்லாமல் உள்ளது. இது குறித்து ஏற்கனவே ஆட்சியர், மற்றும் துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவைப்பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நேரில்வந்து விசாரிப்பதாக கூறினார்கள். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கும், எங்களுக்கும் பிரச்னை நடந்துவருகிறது. ஆக்கிரமிப்பில் வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: