கடலூர், பிப். 7: கடலூர் எஸ்.குமராபுரம் பகுதில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆப் எக்சலன்ஸி பள்ளியில் 2018-19ம் ஆண்டிற்கான ராஜ புரஸ்கார் விருது பெற்ற சாரண சாரணியர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியின் தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், ஆளுநரால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி, மாணவர்கள் பள்ளி பருவத்தில் கல்வி பயிலும் போது இதுபோன்ற இணை செயல்பாடுகளில் பங்குகொண்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும், சமுதாய சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என வாழ்த்தினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்த சாரண, சாரணிய ஆசிரியைகள் விஜயலஷ்மி மற்றும் திவ்யா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். பள்ளி கல்வி ஆலோசகர் நூர்பாஷா, பள்ளி முதல்வர் சாந்திபாண்டியன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிபாய் ஆகியோரும் பாராட்டினர்.
