ஏரியில் வண்டல் மண் எடுப்பதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம்: போலீசார் பேச்சுவார்த்தை

சங்கராபுரம், ஜூலை 29: ஏரியில் வண்டல் மண் எடுப்பதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க வந்துள்ளனர். அப்போது கிராம இளைஞர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டும், கருப்பு துணியை கையில் வைத்துக்கொண்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வட பொன்பரப்பி போலீசார் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வண்டல் மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதனால் கிராமத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: