பேட்மிட்டன் விளையாடிய அரசு ஊழியர் திடீர் சாவு

புதுச்சேரி, ஜூலை 29: புதுச்சேரி சண்முகாபுரம் வஉசி வீதியை சேர்ந்தவர் முரளி (58). இவர், புதுச்சேரி அரசின் வேளாண் பொறியியல் பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மங்கை (43) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை முரளி, புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள பேட்மிட்டன் மைதானத்தில் விளையாடியுள்ளார். விளையாடி விட்டு ஓய்வுக்காக அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அவரை உடனடியாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

 

Related Stories: