விரைவில் இடித்து புதியதாக கட்ட ஏற்பாடு பாளை பஸ்நிலைய வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் பணி தொடக்கம்

நெல்லை, பிப். 6:  நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சந்திப்பு பஸ்நிலையத்தை தொடர்ந்து பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம், டவுன் காந்தி மார்க்கெட் இடித்துவிட்டு புதிய வணிக சந்தை உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக பாளை பஸ்நிலையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களையும் சேர்த்து பெரிய அளவில் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

விரைவில் பணி தொடங்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு இப்பகுதியில் நகராட்சி வசம் உள்ள 58 கடைகளை காலி ெசய்யவேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அதன் வாடகை தாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து அவர்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். தற்போது பணிகளை மாநகராட்சி துரிதப்படுத்த முடிவு ெசய்துள்ளது. இப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடமாக நூற்றாண்டு மண்டபம் அருகே மற்றும் திருவனந்தபுரம் சாலை ராஜேந்திரநகர் அருகே மற்றும் வஉசி மைதானம் எல்ஐசி எதிரே உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. இவை ஓரிரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு அங்கு கடைகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பாளை பஸ்நிலைய வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே நூற்றாண்டு மண்டப சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் சில செயல்பட  தொடங்கியுள்ளன.

Related Stories: