குறைகேட்பு கூட்டத்தில் 449 பேர் மனு

கள்ளக்குறிச்சி, பிப். 4:     கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தது. கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ரத்தினமாலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் கூட்ட நெரிசலில் நடந்து செல்லமுடியாத காரணத்தால் குறைகேட்பு கூட்டம் வெளியே பந்தல் அமைத்து நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுகொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 449 பேர் மனு அளித்தனர். இந்த குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, கல்விதுறை, சுகாதாரதுறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட  பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: