விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு காய்கறி மார்க்கெட்டில் சரக்கு வேன்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஜன.30: காய்கறி மார்க்கெட்டில் கட்டுப்பாடின்றி சரக்கு வேன்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரூர் காமராஜ் மார்க்கெட்டில் காய்கறிகள் சரக்கு வேன்களில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்படுகின்றன. வேன்கள் சரக்கு இறக்கும்நேரத்தில் மார்க் கெட்டுக்கு இரு சக்கரவாகனங்கள் முன்னோக்கி செல்ல முடியவில்லை. வரிசைகட்டி நிற்கவேண்டியதுள்ளது அல்லது வேறுவழியாக செல்லவேண்டியிருக்கிறது. சரக்கு வாகனங்களை முறையாக நிறுத்திவைத்து ஏற்றி இறக்குகின்ற பணிகளை மேற்கொள்ளும்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். மார்க்கெட்டில் லோடு இறக்குவதை முறைப்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை முறையாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை

கரூர், ஜன. 30: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சுதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிட்டிபாபு பேசினார். சுந்தரசேகர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள வாகன குறைபாடுகள், ஓய்வறை, கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட குறைபாடுகளை சரிசெய்து 108 ஆம்புலன்ஸ் சேவை முறையாக மக்களுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வலியுறுத்தி மாவட்ட, மாநில நிர்வாக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் பொதுமக்கள் ஆதரவோடு கூறுவதால் மாவட்ட அதிகாரிகள் தவறுகள் தெரிந்து விடுwம் என்பதால் சேவை விரோதசெயல்களை மறைக்கும் விதமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 பேரை வேறு மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். இதனை ரத்து செய்து கரூர் மாவட்டத்திலேயே பணி வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவையை முடக்கி லாபம் ஈட்ட நினைக்கும் தனியார் நிறுவன அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பது. 2பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து எடுக்கும்போராட்டங்களில் அனைவரும் முழு ஆதரவோடு கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வசந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: