மேட்டூர் பணிமனையில் மின்வாரிய ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

மேட்டூர், ஜன.24:மேட்டூர் மின்வாரிய பணிமனையில், தொழிலாளர்கள் திடீர் தர்ணா அதிகாரிகள் சமரசத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. மேட்டூரில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான மின்வாரி பணிமனை இயங்கி வருகிறது. இதில் 215பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மின்கம்பங்களில் பயன்படுத்தப்படும், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கேண்டீன் வசதி, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர், பெண் தொழிலாளர்களுக்கு தனி உடைமாற்றும் அறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 பெண் தொழிலாளர்கள் உட்பட 195 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த உதவி செயற்பொறியாளர் குமரேசன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினார். உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்த பின்னர், தற்காலிகமாக போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் காலை 10 மணிமுதல் 10.30 மணிவரை பணிகள் பாதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: