×

ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் தேர்வு

கமுதி, ஜன.24:  கமுதி ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக எருமகுளம் ஊராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டார். கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள், ஒன்றிய, மாவட்ட குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சித்ராதேவி, ஆணையாளர் ரவி முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

இன்று ராமநாதபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நடக்கவுள்ள கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென ஆணையாளர் ரவி கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக எருமகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : President ,Association of Panchayat Councils ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...