ரயில்வேதுறை கவனிக்குமா? குரவப்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம், ஜன.24: வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சீதாலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் புதுச்சேரிஅரவிந்த் கண் மருத்துவனை மற்றும் வேதாரண்யம் அரிமா சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தியது. முகாமினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் தென்னரசு துவக்கி வைத்தார். முகாமில் முன்னாள் ஆளுநர் வேதநாயகம், சங்க செயலாளர் செல்வராஜ், சங்க நிர்வாகிகள் சாமிசெட்டி, தங்கதுரை, கண்ணுசாமி, கலையரசன், வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேரை புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: