மாநில இறகுபந்து போட்டி துவக்கம்

ஈரோடு, ஜன. 23: ஈரோடு நீல்கிரீஸ் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட இறகுபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி தொடங்கியது. சங்கத்தின் தலைவர் செல்லையன் துவக்கி வைத்தார். இப் போட்டி வரும் 26ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி 35 முதல் 40 வயது வரை, 41 முதல் 45 வயது வரை, 46  முதல் 50 வயது வரை, 51 முதல் 55 வயது வரை, 56 முதல் 60 வயது வரை, 61 முதல் 65 வயது வரை, 66 முதல் 70 வயது வரை, 71 முதல் 75 வயது வரை ஆகிய பிரிவின்கீழ் நடத்தப்படுகிறது. ஆண்களுக்கான ஒற்றையர், இரட்டையர், பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பினர் இரட்டையர் ஆகிய போட்டிகள் நடக்கிறது. இதில், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வரும் 26ம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில், ஒற்றையர் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களும், இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களும் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: