பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பந்தலூர், ஜன. 21 :பந்தலூர் அருகே கையுன்னி ஆதிவாசி காலனியில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது . பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஆதிவாசி காலனிகள் உள்ளன.  இந்த காலனியில் வசிக்கும் ஆதிவாசி குழந்தைகள் முறையாக பள்ளிக்கு செல்வதில்லை. பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் கையுன்னி மங்கரை, காளியோடு, பூதமூலை, பிஆர்எப் காலனி உள்ளிட்ட பல்வேறு ஆதிவாசி காலனிகளில் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில் நடந்தது.  இதில், ஆதிவாசிகள் நலச்சங்க நிர்வாகிகள் காளிதாஸ், விஜயா, நீலகண்டன், கையுன்னி அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசவுந்தரி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமாதேவி மற்றும் போலீசார், சைல்டு லிங் அமைப்பினர், குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: