காரைக்குடி நகராட்சி பூங்காவில் எல்லைமீறும் காதலர்களால் முகம் சுளிக்கும் பொதுமக்கள் கவனிக்குமா காவல்துறை?

காரைக்குடி, ஜன.21:  காரைக்குடி நகராட்சி சார்பில் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள நவீன பார்க் பலான சமாச்சரங்கள் நடக்கும் இடமாக காதலர்கள் மாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் உள்ளது. நகராட்சி சார்பில் 22 இடங்களுக்கு மேல் பூங்காக்கள் உள்ளன. இதில் பல பூங்காக்கள் போதிய பராமரிப்பு இன்றி உபகரணங்கள் உடைந்து பயனற்று முட்புதர் மண்டி கிடக்கிறது.

இந்நிலையில் கடந்த திமுக நகர்மன்றம் இருந்தபோது மக்களின் பொழுதுபோக்கிற்காக புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அனைத்து வசதிகளுடன் நவீன பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தனியார் பராமரிப்பில் உள்ளதால் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.  வார்டுகளில் உள்ள மற்ற பூங்காக்கள் போதிய வசதிகள் இல்லாததாலும், சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் உடைந்து கிடப்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இந்த நவீன பூங்காவிற்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பொழுது போக்கிற்கான வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் மக்கள் கூட்டம் அதிகஅளவில் இருக்கும். பூங்கா முறையாக பராமரிக்கப்பட்டு வந்தாலும் காதலர்கள்  அடிக்கும் லூட்டி தாங்க முடியாத அளவில் உள்ளது. இதனை தனியார் நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.

 செடி மறைவு உள்பட பல்வேறு பகுதிகளில் காதலர்கள் மற்றும் தம்பதிகள் என்ற பெயரில் வரும் ஒருசிலர் பொதுஇடம் என்று கூட பார்க்காமல் எல்லைமீறும் சம்பங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காரைக்குடி பகுதி வளர்ச்சி அடைந்து இருந்தாலும் குடும்பத்துடன் பொழுதுபோகிற்காக செல்ல எந்த ஒரு இடமும் இல்லை. இதனால் வேறுவழியின்றி குடும்பத்துடன் இந்த பூங்காவிற்கு வரவேண்டிய நிலை உள்ளது. பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட உள்ள உபகரணங்களில் பெரியவர்கள் மற்றும் ரவுடிகள் அமர்ந்து கொள்கின்றனர். தவிர பெண்குழந்தைகளை அழைத்துவரமுடியாத நிலை உள்ளது. அதேபோல் காதலர்கள் மற்றும் பலான தொழிலில் ஈடுபடுபவர்கள் ரூ.10 கொடுத்துவிட்டு தங்கள் தேவைகளுக்கு இந்த இடத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். இதனால் குடும்பத்துடன் வருவோருக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை உருவாகிறது. முன்பு பஸ்ஸ்டாண்டில் காவலுக்கு உள்ளவர்கள் அவ்வப்போது ரவுண்ட்ஸ் வருவார்கள். போலீசார் அடிக்கடி வருவதால் அதற்கு பயந்து இதுபோன்று எல்லை மீறும் நபர்கள் வருகை ஓரளவு குறைந்து இருந்தது. தற்போது போலீசார் கண்காணிப்பு இல்லாததால் இவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது. தவிர கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியாததால் மேலும் இந்த நபர்களுக்கு வசதியாக போய்விட்டது என்றனர்.

Related Stories: