46வது கிளையாக மதுரையில் செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ் திறப்புவிழா

மதுரை, ஜன. 21:செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ் தனது 46வது கிளையை மதுரையில் நேதாஜி ரோட்டில் நேற்று திறந்தது. விழாவிற்கு செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பாபி செம்மனூர் தலைமை வகித்தார். நடிகை ஸ்ருதிஹாசன் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரை ஜூவல்லர் உரிமையாளர் சங்கத்தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு செம்மனூர் ஜூவல்லர்ஸ் குழும டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நகைக்கடை குறித்து, தலைவர் பாபி செம்மனூர் கூறுகையில், ‘‘எங்களுடையது 157 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நகைக்குழுமம். இது தமிழகத்தில் 4வது கிளை. உலக அளவில் 46வது கிளையை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, பிஐஎஸ் ஹால்மார்க் செய்யப்பட்ட 916 ஆபரணங்கள், மற்றும் உலகத்தரம் வாய்ந்த வைர ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு டிசைன்களில் அனைத்து வகையான நகைகளும் கிடைக்கும். தொடக்கவிழா சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு வைர நகைகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும், துவக்க நாளில் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்களும் வழங்கப்பட்டது. இந்த குழுமத்தில் செம்மனூர் கிரெடிட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், டைம்ஷேர் பிசினஸ், ஈ.காமர்ஸ் வர்த்தகம், சூப்பர் மார்க்கெட் பஜார், ஏவியேஷன் விருந்தோம்பல், பாபி டூர்ஸ் டிராவல்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளது’’ என்றார். பாபி செம்மனூர், சமூக சேவகர், விளையாட்டு வீரர். 200க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார். ரத்ததானத்திற்காக 812 கி.மீ தூரம் ஓடி, 2.5 லட்சம் பேர் கொண்ட ரத்ததான மன்றம் உருவாக்கியுள்ளார்.

Related Stories: