கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பரமக்குடியில் தொழிலதிபர் இல்ல திருமண விழா

பரமக்குடி, ஜன.21: பரமக்குடி சிவசிவ குடும்பத்தின் தொழிலதிபர் தமிழ்ச்செல்வம் இல்லத் திருமண விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முதுகுளத்தூர் முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலாளரும், தொகுதி அமைப்பாளருமான தூவல் தொழில் அதிபர் கே.ராமர்தேவரின் மகன் சிவசிவ குழுமத்தின் தொழிலதிபரும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையின் மாநில ஒப்பந்ததாரருமான தமிழ்ச்செல்வம் -முத்துலட்சுமி ஆகியோரது மகன் ராமகிருஷ்ணனுக்கும், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரபேட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் முத்துச்சாமி பாண்டியன் -முத்துலட்சுமி ஆகியோரின் மகள் சித்ராவுக்கும் பரமக்குடி காமராஜர் நகர் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

Advertising
Advertising

இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே குரூப் பாலசுப்பிரமணி- டாக்டர் கலைச்செல்வி, அருப்புக்கோட்டை சிவசிவ ப்ளூ மெட்டல்ஸ் இளங்கோவன்- அங்காள ஈஸ்வரி, மதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நாகநாதன் -ராமலெட்சுமி, மணமகன் சகோதரர் டாக்டர் முருகராஜா உள்பட மணமக்கள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: