வாலிபர் கொலை வழக்கில் செல்போன் எண்களை வைத்து விசாரணை

கிருஷ்ணகிரி, ஜன.21:ராயக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில், செல்போனில் பதிவான எண்களை வைத்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயக்கோட்டை வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சந்தானபாண்டியன்(27), ஓசூரில் தங்கி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், அவரது நண்பர்கள் போனில் அழைத்ததால், அறையில் இருந்து சென்ற சந்தாகபாண்டியன், நேற்று முன்தினம் காலை கர்நாடக மாநிலம் மாலூரில் சடலமாக கிடந்தார். அப்பகுதி அளித்த தகவலின் பேரில், கர்நாடகா  போலீசார் சடலத்தை கைப்பற்றி விமக்கள் சாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது தலை மற்றும் கன்னத்தில் ரத்த காயங்கள் இருந்தன. அருகிலிருந்த டாஸ்மாக் கடை முன்பு இருந்த அவரது டூவீலரை மீட்ட போலீசார், சந்தானபாண்டியனின் செல்போன் எண்ணை வைத்தும், அவரது நண்பர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் ஓசூர் அருகே உள்ள சின்னஎலசகிரியை சேர்ந்த ராதா என்ற பெண்ணும், ராயக்கோட்டையை சேர்ந்த ராமன் என்பவரது தொலைபேசி மட்டும் தொடர்பில் இல்லாமல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் குறித்து விசாரித்த போது, ராதா என்ற பெண்ணை சந்தானபாண்டியன் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: