தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்

விழுப்புரம், ஜன. 21:  விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கு மாற்றாக மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாளஅட்டை(ஸ்மார்ட்கார்டு) பெற்றிடும் வகையில் சிறப்புமுகாம்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 27ம் தேதி வானூர் தாலுகாவிற்குட்பட்ட உப்புவேலூர், கிளியனூர், நெமிலி, வானூர் வருவாய் அலுவலகங்களிலும், மரக்காணத்திற்குட்பட்ட மரக்காணம், பிரம்மதேசம், சிறுவாடி, திண்டிவனம் தாலுகா வடசிறுவலூர், மயிலம், தீவனூர், ரெட்டணை, ஒலக்கூர், ஆவணிப்பூர், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணிவரையில் நடக்கிறது.

28ம் தேதி மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை, சாத்தாம்பாடி, மேல்மலையனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், செஞ்சி தாலுகா சத்தியமங்கலம், வல்லம், மேல்ஒலக்கூர், செஞ்சியிலும், விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட அன்னியூர், கஞ்சனூர், சித்தலம்பட்டு, விக்கிரவாண்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் நடக்கிறது. 29ம் தேதி கண்டாச்சிபுரம் தாலுகா முகையூர், கண்டாச்சிபுரத்திலும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அரசூர், திருவெண்ணெய்நல்லுர், சித்தலிங்கமடத்திலும், விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட காணை, வளவனூர், கண்டமங்கலம், விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் இந்த சிறப்புமுகாம் நடக்கிறது.

இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாள அட்டை பெற்று தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு செய்திடாத மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாள அட்டையின் அனைத்து புத்தகங்கள் மற்றும் மருத்துவசான்றுடன், ஆதார், குடும்பஅட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களின் நகல்கள், செல்போன் எண் ஆகியவைகளுடன் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: