விபத்துகள் அதிகரிப்பால் பேரிக்கார்டுகளை குறைக்க மக்கள் வலியுறுத்தல்

கீழக்கரை, ஜன.20: கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விளம்பர பேரிக்காட்டால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தினமும் விபத்து ஏற்பட்டு வருவதால் பேரிக்கார்டுகளை குறைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் தினமும் செல்கின்றனர்.
ராமநாதபுரம் முதல் ஏர்வாடி தர்ஹா வரை அதிகம் வேகத்தடைகள் உள்ளது.

இடையில் விளம்பர பேரிகாட் உள்ளன. இந்த பேரிக்காட்டால் எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் எதிர்பாராத விதமாக எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.இதனை ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்து தேவையில்லாத விளம்பர பேரிகாட்களை அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,
× RELATED ஆக்கிரமிப்பின் பிடியில் வெள்ளை மலை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தல்