மூணாறில் கடும் நெரிசலை ஏற்படுத்திய டிவைடர்கள் அகற்றம்

மூணாறு, ஜன.20: மூணாறில் வாகன ஓட்டுனர்களுக்கு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த டிவைடர்கள் அகற்றப்பட்டன.கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியுடன் முக்கிய இடங்களில் டிவைடர்கள் பொருத்தப்பட்டன.இந்நிலையில் மூணாறில் சாலைகள் குறுகியதாக உள்ளதால் டிவைடர்கள் மூலம் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்தும் ஏற்பட்டது. மேலும் உயரம் கூடிய டிவைடர்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக பலத்த காற்று வீசும் போது பாதசாரிகள் மீது டிவைடர்கள் சரிந்து விழும் நிலை உருவானது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் மூணாறு வியாபாரிகள், பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் மூணாறில் கேடிஹச்பி அலுவலகம் முதல் பெரியவாரை செல்லும் வழி வரை அமைக்கப்பட்டிருந்த டிவைடர்கள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக உயரம் குறைந்த கான்க்ரீட் தடுப்புகள் வைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் டிவைடர்கள் மாற்றியதன் மூலம் மூணாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Removal ,Munnar ,
× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்