போடியில் விளையாட்டு போட்டி

போடி, ஜன.20: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, போடியில் சாரல்நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் விளையாட்டு போட்டி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.போடி கிருஷ்ணா நகர் அருகில் சாரல் நகரில் நடந்த விழாவையொட்டி இப்பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோயில் முன்பு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிக்கு சாரல் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், பொருளாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் பேபி, உத்தமபாளையம் நீதித்துறை நீதிமன்ற கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Game ,Match Game ,
× RELATED வேப்பலோடையில் வட்டார விளையாட்டு போட்டி