திண்டிவனத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்

திண்டிவனம், ஜன. 20: விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லம் ஒன்றியம், நாட்டார்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான மஸ்தான், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை செயலாளர் பிரபு தலைமையில் தேமுதிக நீலகண்டன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பாண்டியன், அஜித்குமார், சுரேஷ், அஜித், ராஜ்குமார், சரண்ராஜ், ஆனந்தராஜ், மகாதேவன், அர்ஜுனன், விநாயகம், லட்சுமணன், பாபு மற்றும் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த அருண்குமார், கோகுல், ராஜேந்திரன், சக்கரபாணி, நெடுஞ்செழியன், அரியான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். வல்லம் ஒன்றிய பொருளாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் அன்புசெழியன், ஊராட்சி செயலர் சௌந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன், ஒன்றிய பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: