மகர சங்கராந்தி விழா

விழுப்புரம், ஜன. 19: விழுப்புரம் அடுத்த காணை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 19ம் ஆண்டு மகர சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், மேளதாளங்கள் முழுங்க வாண வேடிக்கையுடன் ஐயப்பன் ஊர்வலம் நடந்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடந்தது. அதைதொடர்ந்து கற்பூர ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: