ஆண்டிபட்டியில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டு அரசமரம்

தேனி, ஜன. 19: ஆண்டிபட்டியில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆகமவிதிப்படி பிரமாண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டிபட்டி மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.இக்கோயிலின் ராஜகோபுரம் முன்பாக சுமார் 200 ஆண்டுகள் பழமையான 90 அடி உயர அரசமரம் உள்ளது. இந்த மரத்தை குழந்தை வரம் வேண்டுவோர் 48 நாள் விரதமிருந்து 108 முறை சுற்றி வந்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அரசமரம் நேற்று காலை திடீரென வேறோடு சாய்ந்தது. இதில் மரம் அருகில் இருந்த வீடுகளின் மீது சாய்ந்தது. இதில் உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் கடைவீதியில் ஏத்தக்கோயில் இணைப்பு சாலையில் மரம் விழுந்ததால் சாலைபோக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையறிந்த பேரூராட்சி நிர்வாகம் விரைவாக வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: