108 நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் ஊர்வலம்

உளுந்தூர்பேட்டை,  ஜன. 14: உளுந்தூர்பேட்டையில் அகத்தியர் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள்  பேரவையின் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா நேற்று நடைபெற்றது.  இதனை முன்னிட்டு காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில்  அங்கரிக்கப்பட்ட சரஸ்வதிதேவிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதனை  தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடைபெற்றது.  இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு  பகுதியில் இருந்து வந்த 108 தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்களின் இசை  நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

Advertising
Advertising

இதனை தொடர்ந்து மணிக்கூண்டு திடலில்  இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, சாரதா ஆஸ்ரமத்தின் நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்மவிகாசப்ரியாஅம்பா, முன்னாள்  பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானவர்கள்  கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேரவையின் தலைவர் சிவசங்கர், துணை  தலைவர் செல்வம், செயலாளர் தெய்வநாயகம், பொருளாளர் வெங்கடேசன், பிரபு, ஏழுமலை உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.

Related Stories: