நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.9: மத்திய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை அவுரி திடலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சிவகுமார் பேசினார். 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் குறைந்தபட்ச கால முறை ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் சுகுமார் நன்றி கூறினார்.நாகை எல்ஐசி முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 750 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: