இன்று துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது உடைந்த குடிநீர் தொட்டி தோகைமலை பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

தோகைமலை, ஜன. 9: தோகைமலை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தோகைமலை அருகே ஆர்.டி.மலை பொியநாயகி அம்பாள் சமேதா விராச்சிலேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்த பெரியநாயகி அம்பாள் சமேதா விராச்சிலேஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால், தயிர், உட்பட அனைத்து வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தீபாராதனை நடந்தது. பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. .இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதே போல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், சிவாயம் சிவபுரிஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் டி.எடையபட்டி ரத்தினகிரீஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Related Stories: