புத்துவாயம்மன் கோயில் குளத்தை சீரமைத்து அழகுப்படுத்த நடவடிக்கை

விழுப்புரம், ஜன. 3:    விழுப்

புரம் அருகே உள்ள கோலியனூரில் பிரசித்திபெற்ற புத்தவாயம்மன்கோயில் குளம் உள்ளது. இதன் எதிரே கோயிலுக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. பழமை

வாய்ந்த இந்த குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பல்உற்சவம் நடந்து வருகிறது. இந்த குளத்தைச் சுற்றிலும் கருங்கல்படிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு பல ஆண்டுகளாக அழகுடன் காட்சியளித்தது. தற்போது தண்ணீரின்றி பாசிபடிந்து குளம் வீணாகி வருகின்றன. குளத்தை சுற்றிலும் முள்செடிகளும், கொடிகள் படர்ந்துள்ளது. குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால் குளத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சேர்ந்தும் குளக்கரையில் பலர் சூதாட்டம் ஆடியும், இரவில் மதுஅருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. இந்த குளத்திற்கு மழைக்காலத்தில் தொடர்ந்தனூர் ஏரியிலிருந்து வரும் நீர்வரத்து வாய்க்கால் மூலம் குளிலான்குட்டை, மாரியம்மன்கோயில் குட்டைகளுக்கு வந்து மழைநீர் சேமிக்கப்படும்.

 இதற்கான நீர்வரத்துவாய்க்கால்கள் வழியில் அடைபட்டு கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் குளத்திற்கு சொட்டுநீர் வருவதற்கும் வழியில்லாமல் உள்ளது. கோலியனூர் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளம் குடிநீர்தட்டுப்பாட்டை போக்கவும் உதவியாக உள்ளது. இக்கோயிலும், குளமும் இந்துசமய அறநிலையத்

துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தினை முறையாக பராமரிக்காதது ஏன்? என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்டத்தில் முக்கிய நீர்நிலைகள், கோயில்குளங்களை சீரமைத்து மழைநீரை சேமிக்க தமிழக அரசு நிதிஒதுக்கீடு செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் இந்துசமயஅறநிலையத்துறை செயல் அலுவலகம் செயல்பட்டு வரும் எதிரே இப்படி பிரதானகோயில் குளம் பாழ்பட்டு சீரழிந்துவருவது பக்தர்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோயில்குளத்தை சீரமைத்து, அழகுபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

Related Stories: