வையாபுரி கண்மாயில் அமலை செடி ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

பழநி, டிச.30: வையாபுரிக் கண்மாயில் உள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டுமென தமிழக மக்கள் முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் தமிழக மக்கள் முன்னணியின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணித்தலைவி சந்திரகலா தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சையதுராஜா முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார். மாநிலத்தலைவர் ஜாபர்சாதிக் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் சின்னக்கலையம்புத்தூர் சமத்துவபுரத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். பழநி வையாபுரி குளத்தில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும். பழநி நகரில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகளை தடை செய்ய வேண்டும். தைப்பூச திருவிழா காலங்களில் பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: