நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தேனி, டிச. 29: தேனி கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் குரங்கனி, சோத்துப்பாறை அணை பகுதிகளில் முகாம்கள் நடந்தது. இம்முகாம்களில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, விதைப்பந்து தூவுதல், ஆலய தூய்மைப்பணி, பள்ளி வளாக தூய்மைப்பணி நடந்தது. முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாண்டியராஜன், உதவி திட்ட அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்தனர்.

Related Stories: