ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் உணவு திருவிழா

சேலம், டிச.27:  சேலத்தில், முதன்முறையாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில்  உணவுத் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் பழனிசாமி, துணைத் தலைவர்கள் நௌசாத், பாபு ஆகியோர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உணவுத் திருவிழா  27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஜவஹர் மில் திடலில் நடக்கிறது.  இதில், சேலத்தில்  உள்ள முக்கிய ஹோட்டல்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 102 ஸ்டால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, சைவம், அசைவம் என பாரம்பரிய உணவு வகைகள் நேரடியாக மக்களுக்கு சமைத்து வழங்குகிறோம். விலையும் மிக குறைவாக வைத்துள்ளோம்.

மேலும், குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு அரங்கமும், பொதுமக்கள் கண்டுகளிக்க சின்னத்திரை நடிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், மேஜிக் போன்றவையும் இடம்பெறுகிறது. கார்கள், டூவீலர் நிறுத்தவும் பார்க்கிங் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உணவுத் திருவிழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று(27ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ராமன் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: