இ ந் த நா ள் ‘நடுங்குகிறாள் இளவரசி’ கொடைக்கானலில் ஸ்ெவட்டர் விற்பனை ஜோர்

கொடைக்கானல், டிச. 25: கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால் ஸ்வெட்டர் உள்ளிட்ட கம்பளி ஆடைகள் விற்பனை களைகட்டியுள்ளது.

கொடைக்கானலில் தற்போது குளிர் சீசனாகும். மழைக்காலம் முடிந்து துவங்கும் இந்த சீசனில் பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்தாலும் மாலையில் இருந்து குளிர் அடிக்க ஆரம்பித்து விடும். நள்ளிரவில் கடுங்குளிர் நிலவும். இதனால் கொடைக்கானலை சேர்ந்த மக்கள், சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் தற்போது ஸ்வெட்டர்கள், ஜெர்கின்கள், மப்ளர்கள், குல்லாக்கள் போன்ற கம்பளி ஆடைகளின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியதால் ஓட்டல், விடுதி, கைடு, வியாபாரிகள் என அனைத்து சுற்றுலா தொழில்புரிவோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: