கலைஞர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

நிலக்கோட்டை, மே 30: ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வரும் ஜூன் 3ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக கழக துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் உத்தரவுப்படி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி.செந்தில்குமாரின் வழிகாட்டுதல்படி மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை வகித்தார்,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிராமங்கள் தோறும் கட்சி கொடியேற்றி, பல இடங்களில் நலத்திட்ட உதவிகளுடன் அன்னதானம், அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினர். இதில் ஆத்தூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்: ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: